கரோனா பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஜனதா ஊரடங்கு என்ற முறையை தொலைக்காட்சியில் தோன்றி நேற்றிரவு 8 மணிக்கு அறிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் முன்னரே ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், “இன்று இரவு (நேற்று) 8 மணிக்கு பிரதமர் என்ன அறிவிப்பார்? குறைந்தபட்சம் அனைத்து நகரங்கள் மற்றும் நகரங்களில் 2-4 வார காலத்திற்கு மொத்தமாக பூட்டப்படுவதை பிரதமர் அறிவிக்கவில்லை என்றால் நான் ஏமாற்றமடைவேன்” என்று கூறியிருந்தார்.
மேலும் கரோனா வைரஸின் தீவிரம் பற்றிய அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். உலகளவில் கரோனா வைரஸ் தொற்று எட்டாயிரத்துக்கும் (8,000) மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது.
இந்த தொற்று காரணமாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிறுவனங்கள் தங்கள் ஊழியரை வீட்டிலிருந்தப்படியே வேலை செய்ய அறிவுறுத்திவருகின்றன.
இதையும் படிங்க: மார்ச் 22ஆம் தேதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்!