ETV Bharat / bharat

கொரோனா வைரஸ் - அரசின் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு! - மோடி கொரோனா வைரஸ் ஆய்வு

டெல்லி: கொரோனா வைரஸை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள்குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

Corona virus, கொரோனா வைரஸ்
Corona virus
author img

By

Published : Mar 8, 2020, 9:58 AM IST

உலகை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், இந்தியாவில் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. புதிதாக மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சூழிலில், வைரஸை தடுக்கும் பொருட்டு அரசின் நடவடிக்கைள், முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சௌபி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமைச்சரக தலைமைச் செயலாளர் ராஜீவ் கௌபா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பொதுவெளிகளில் அதிகம் கூடுவதைத் தடுக்க மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் என பரித்துரைத்த பிரதமர் மோடி, நோயாளிகளைத் தனிமைப்படுத்தத் தேவையான இடங்களைக் கண்டறியுமாறு, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்யமாறும் உத்தரவிட்டார்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 (கொரோனா) வைரஸ் தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான், அமெரிக்கா என உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க : 'செழிப்பான குடும்பத்தில் பிறந்த என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லை' - தெலங்கானா முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.