பாஜக சார்பில் நடைபெறவிருந்த போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா உள்ளிட்டவற்றை அடுத்த மாதம் வரை அக்கட்சி தள்ளிவைத்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அதிகளவில் ஒன்றாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா இதனை அறிவித்துள்ளார்.
உலகில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருவர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
இதையும் படிங்க: 'கட்சித் தாவல் தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது' - பாஜக அமைச்சர் கொந்தளிப்பு