ETV Bharat / bharat

கோவிட்-19 விழிப்புணர்வு: புதுச்சேரி அரசுடன் கைக்கோத்த கலைஞர்கள் சங்கம்! - புதுச்சேரி தமிழ் திரைப்பட நடிகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுச்சேரி: கோவிட்-19 பரவலைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

covid-19 Awareness: Artists Association join hands with Puducherry Govt
கோவிட்-19 விழிப்புணர்வு : புதுச்சேரி அரசுடன் கைக்கோர்த்துள்ள கலைஞர்கள் சங்கம்!
author img

By

Published : Apr 20, 2020, 11:23 AM IST

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210 நாடுகளைச் சேர்ந்த 24 லட்சத்து ஏழாயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று உறுதிசெய்துள்ளது.

சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 26 நாள்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 17 ஆயிரத்து 615 பேர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 858 பேர் குணமடைந்தும் 559 பேர் உயிரிழந்தும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள புதுச்சேரி அரசு அறிவித்திருந்த ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். இதேபோல் பல்வேறு அமைப்புகளும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி தமிழ் திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவிட்-19 வைரஸ் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்தைப் பகுதியில் தொடங்கிய புதுச்சேரி யூனியனின் பல இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதுவையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மாறுவேடம் அணிந்து பொதுமக்கள் முன்னிலையில் பாட்டு பாடியும் நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், சமூக இடைவெளி குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது குறித்தும் உலகை கரோனா வைரஸ் எவ்வாறு அச்சுறுத்திவருகிறது என்பது குறித்தும் எடுத்தியம்பப்பட்டது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்த இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.

தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பரப்புரை

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாண்டி செல்வம், பொதுச்செயலாளர் குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

புதுச்சேரியில் இதுவரை 7 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் புதுச்சேரி சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பொதுவெளியில் எச்சில் உமிழ்ந்தால் கடும் நடவடிக்கை...! - நாராயணசாமி எச்சரிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.