அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி ஜோர்ஹட் மாவட்டத்தில் மார்ச் 19ஆம் தேதி நான்கரை வயது சிறுமி ஒருவர் கரோனா அறிகுறியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவர் சந்தேகத்தின்பேரில், கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமிக்கு கரோனா பாதிப்பிருப்பதை உறுதிப்படுத்தினர். அதனால் அந்தச் சிறுமி, தனது குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அதனைக் கவுகாத்தி காவல் துணை ஆணையர் ரோஷினி அபரஞ்சி கோராட்டி தெரிவித்தார். அச்சிறுமி அஸ்ஸாமில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது நபராவார்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்த சென்னை வந்த 56 பேருக்கு கரோனா அறிகுறியா? - மருத்துவமனையில் அனுமதி