ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 141 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4, 402ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து அம்மாநில கரோனா ஒழிப்பு சிறப்பு அலுவலர், 'நேற்று (ஜூன் 11) கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,261ஆக இருந்தது. இந்நிலையில் புதியதாக பாதித்தவர்களின் எண்ணிக்கையால், தற்போது கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,402ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை' என்றார்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 1,723 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 2,599 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த வாரம் சனிக்கிழமை (ஜூன் 6) அன்று புதியதாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 161ஆக இருந்தது.
இதையும் படிங்க: கரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய மத்திய அரசு அலுவலர்கள்...!