கர்நாடக மாநிலம் பெங்களூரு சிலிக்கான் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருக்கும் சந்தோஷ், வட்டிக்கு விடும் தொழில் செய்துவந்தார். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மஞ்சுநாத் அறிமுகம் ஆனார். இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் மஞ்சுநாத் வீட்டுக்கு சந்தோஷ் அவ்வபோது சென்றுவந்துள்ளார்.
இதனிடையே மஞ்சுநாத்தின் மனைவி சாவித்திரி மீது சந்தோஷ் மோகம் கொண்டுள்ளார். பின்னர் ஒருநாள் மஞ்சுநாத் வீட்டில் இல்லாத சமயத்தில் அங்கு சென்ற சந்தோஷ், தனது விபரீத ஆசையை தனது நண்பரின் மனைவி மீது வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இது குறித்து மஞ்சுநாத்திடம் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத், தனது நண்பர் சந்தோஷை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து மஞ்சுநாத்தின் மனைவி சாவித்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவித்துவிட்டார். எனினும் சாவித்திரிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார். சந்தோஷின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தனது கணவர் மஞ்சுநாத்திடம் இதுபற்றி சாவித்திரி தெரிவித்தார்.
ஒருகட்டத்தில் மஞ்சுநாத்தின் வீட்டுக்குள் ரகசியமாக கேமராக்களை பொருத்தி, சாவித்திரியின் அந்தரங்களை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால், இந்த அந்தரங்க காணொலிக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், சந்தோசை கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
அதன்படி சம்பவத்தன்று சந்தோஷை கொன்று, அவரது உடலை சணல் மூட்டையில் வைத்து கட்டினர். பின்னர் பெங்களுவில் ஒரு புறநகர் பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டனர். சணல் மூட்டையில் இளைஞர் ஒருவர் உடல் ஒன்று கிடப்பது பற்றி அப்பகுதி காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், காவலர்கள் விசாரணை நடத்தியதில் சந்தோஷை கொன்றது, மஞ்சுநாத் மற்றும் அவரின் மனைவி சாவித்திரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவலர்கள் கைதுசெய்தனர்.
கொலையாளி சிக்கியது எப்படி?
சந்தோஷ் கொலை வழக்கில் காவலர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளியை பிடிப்பதில் காவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. கொலையாளியை அடையாளம் காண முடியாமல் காவலர்கள் திணறினர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி (ரகசிய கண்காணிப்பு) கேமராக்களை சோதனையிட்டனர். அதில் ஆட்டோ ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையை கடப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆட்டோ ஓட்டுனர் மஞ்சுநாத் என்பதும் அவர் தன் மனைவியுடன் இணைந்து சந்தோஷை கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு!