கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வாடகைக்கு குடியிருக்கும் மக்களை காவல் நிலையத்திற்கு தொடர்ந்து அலைய வைத்துள்ளனர் ஒரு தம்பதியினர். வாடகைக்கு வீடு தருவதாகக் கூறி இத்தம்பதியினர் லட்சக் கணக்கில் மக்களிடமிருந்து பணம் பறித்து, அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.
இவர்கள், தங்களை வீட்டின் உரிமையாளர்களாகக் காட்டிக்கொண்டதன் காரணமாக, பலரும் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து தற்போது காவல் நிலையத்தை அணுகு வருவதுடன், உண்மையான உரிமையாளர்கள் வந்து தங்களை வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்துவதாகவும் வேதனைத் தெரிவிக்கின்றனர் இவர்களிடம் ஏமாந்தவர்கள். இத்தம்பதியினரிடம் இதுவரை 80 பேர் வீட்டை குத்தகைக்கு எடுத்து ஏமாந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களிடம் குத்தகைக்கு பணமளித்த நான்சி என்ற நபர், தன்னிடமிருந்து பணத்தைப் பெற்ற மனோகர் என்ற நபரையும், அவரை அறிமுகம் செய்துவைத்த இடைத்தரகரையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை நம்பியதால்தான் இன்று தான் நடுத்தெருவில் நிற்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
80 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட இத்தம்பதியினர் மேல் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.