இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் நிலையில், நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதுவரை 49 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது.
பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பொதுப்போக்குவரத்திற்குக் கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. மேலும், தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதைப் பொதுமக்கள் தவிர்க்காவிட்டால், பொதுப் போக்குவரத்தை அரசு முற்றிலும் நிறுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அம்மாநில பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு குறைந்துள்ளது. நகரில் குளிர்சாதனப் பேருந்துகள், ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மகாராஷ்டிரா இதுபோன்ற முடக்கத்தைக் கண்டுள்ளது வர்த்தகத்தை வெகுவாகப் பாதிக்கும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தாபாவாலா எனப்படும் உணவு விற்பனை தொழிலாளர்கள் இன்று முதல் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை