சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால்
பாதிக்கபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மத்திய கிழக்கு நாடான ஈரானில் ஆயிரம் மீனவர்கள் (தமிழகர்களும் அடக்கம்) , ஆயிரத்து 100 பக்தர்கள், 300 மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், இவர்களை மீட்டுவர ஈரானுக்கு மூன்று விமானங்கள் அனுப்பப்படவுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்தத் திட்டம்படி, முதல்கட்டமாக ஈரான் ஏர் விமானம் மூலம் 130-150 இந்தியர்கள் மீட்கப்படுவர். பிறகு, மாரச் 14ஆம் தேதி சரியாக 12:30 மணியளவில் மும்பையிலிருந்து இன்னொரு விமானம் புறப்படும். இதையடுத்து, மூன்றாம் கட்டமாக மார்ச் 15ஆம் தேதி சரியாக 1:40 மணிக்கு டெல்லியிலிருந்து மற்றுமொரு விமானம் புறப்படவுள்ளது" என்றார்.
முன்னதாக, மக்களவையில் இன்று பேசிய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, " சர்வதேச விமானங்களை தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணித்துவருகிறோம். இதுவரை 10 லட்சத்து 57 ஆயிரத்து 506 பயணிகள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர், 8-10 நிமிடம் வரை பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. அது தற்போது 20-25 நிமிடங்களாக அதிகரித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க : 'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்த
ல்