டெல்லி: கோவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு நீட் மறு நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் புதன்கிழமை காலை (அக்.14) தொடங்கியது.
இந்நிலையில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வெழுதும் அறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட்-19 கட்டுப்பாட்டு வழிகாட்டு முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன. நாடு முழுக்க கடந்த மாதம் 13ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) மறுதேர்வு நடக்கிறது.
முன்னதாக பெருந்தொற்று காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது, இதுபோன்ற தேர்வுகள் சரியான காலத்தில் நடத்தப்படாவிட்டால் மாணவர்களின் எதிர்க்காலம் பாதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு