இந்தியாவில் 31 பேருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்காமலிருக்க தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மாநில அரசுகளுக்கு இது இக்கட்டான சமயம். பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதுபோன்ற ஆபத்து காலங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற அச்சுறுத்தல்களைச் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள தெரிந்தெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அந்தந்த மாநிலங்களின் முக்கியப் பகுதிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இன்றியமையாதது. சுற்றுப்புற, சுகாதார அடிப்படை வசதிகளை அதிகரிப்பதோடு, அதனை மேம்படுத்த வேண்டும்.
இதனோடு, கூட்டமாகக் கூடும் நிகழ்வுகளைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். கொரோனா வைரஸ் குறித்த சரியான விளக்கத்தையும், தேவையில்லாத அச்சத்தையும் மக்களிடம் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கையெறி குண்டு தாக்குதல்: ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழப்பு!