சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதில் இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டோர் கோவிட்-19 வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பூடான் - இந்தியா எல்லைப் பகுதியை மேற்கு வங்க அரசு மூடியுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க காவல் துறை அலுவலர் கூறுகையில், கோவிட்-19 எதிரொலியால் நேற்று வர்த்த உறவுகள் தடை செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று மொத்தமாக பாதையையே மூடியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வீட்டில் சகோதரியின் சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த அண்ணன்: இத்தாலியில் அவலம்