இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் வைரஸின் தாக்கம் குறையவில்லை. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 8,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.