ETV Bharat / bharat

கரோனா பற்றி மக்களிடம் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி - Latest Corona News

டெல்லி: கரோனா வைரஸ் பற்றி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் இன்று இரவு எட்டு மணிக்குப் பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: PM Modi to address nation today

author img

By

Published : Mar 19, 2020, 10:05 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் உச்சத்தில் உள்ளது. கரோனா வைரசால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்தும், 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக மக்களிடையே மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் கூடி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பாக வெளியான ட்விட்டர் பதிவில், ''கோவிட் 19 பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனிநபர்கள், உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை கோவிட் 19ஐ எதிர்கொள்வதற்கான வழிகளை வேகமாகக் கண்டறிய தீவிரம் காட்டுமாறு பேசியுள்ளார்.

  • PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.

    — PMO India (@PMOIndia) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுவரை கோவிட் 19ஐ சிறப்பாக எதிர்கொண்ட மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆயுதம், துணை ராணுவப்படையினர், நகராட்சிப் பணியாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்கும், மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் பேசுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா மனிதகுலத்திற்கான எதிரி' - உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.