ETV Bharat / bharat

கொரோனா நோயாளிகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் - ஹர்ஷ் வர்தன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்

டெல்லி: கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், அவர்கள் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Harsh
Harsh
author img

By

Published : Mar 11, 2020, 11:56 AM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அண்டை நாடான சீனாவில் கடந்த ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய இந்நோய், அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளிலும் தீவிரமாகப் பரவிவருகிறது.

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் மூலமாகவே இந்நோய் பரவுவதால், வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன் நோய் பாதிப்பால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளான சீனா, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62ஆக உயர்ந்துள்ள நிலையில், டெல்லியில் நோய் பாதிக்கப்பட்ட நபர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹஷ்ர் வர்த்தன் சந்தித்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநில சுகாதரத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசி மூலம் நிலைமை குறித்து கேட்டறிந்தர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஹர்ஷ் வர்தன், கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அரசு தொடர்ந்து கண்காணித்துவரும் நிலையில், விரைவில் உடல்நலம் பெற்று வீடுதிரும்புவார்கள் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொரோனா - ஈரானில் உயிரிழப்பு 291ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.