இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 75 பேரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்கும்.
மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலின்படி, கேரளாவில் அதிகப்படியாக 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது மகாராஷ்டிராவில் 11 பேர், உத்தரப் பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் ஆறு பேர், கர்நாடகத்தில் ஐந்து பேர் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை மூன்று பேர் மட்டுமே கொடிய வைரஸான கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டவர் உயிரிழப்பு!