கோவிட் 19 (கொரோனா வைரஸ்) தொற்று தற்போது சீனாவைத் தாண்டி இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி விளங்குகிறது. இத்தாலியில், வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை ஆயிரத்து 441 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதால், அங்குள்ள 211 இந்திய மாணவர்கள் உள்ளிட்ட 218 பேர், இன்று (மார்ச் 15) காலை ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.
அழைத்துவரப்பட்ட 218 பேரும், தென்மேற்கு டெல்லியிலுள்ள இந்தோ திபெத் காவல் படையின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட 518 பேரும் இந்த முகாமில்தான் காண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய எல்லைகள் நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடல்