ETV Bharat / bharat

‘நிலைமை ரொம்ப மோசமாயிடும்’ - ராகுல் காந்தி எச்சரிக்கை - ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு

டெல்லி: கொரோனா சிக்கலை அரசு சரியாகக் கையாளாவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிவை நோக்கிச் செல்லும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Rahul
Rahul
author img

By

Published : Mar 13, 2020, 12:34 PM IST

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவையும் தற்போது அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 75 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவிற்கு 2 ஆயிரத்து 919 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் வர்த்தக ஆரம்பத்தில் பங்குச்சந்தை குறியீட்டு எண் 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் எச்சரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், “நான் தொடர்ச்சியாக கூறி வருகிறேன். மிகப்பெரும் பிரச்னையான கொரோனா வைரசை கண்டுகொள்ளாமல் புறம் தள்ளுவது சரியான அணுகுமுறை இல்லை. இதுபோன்ற அலட்சிய போக்கு இந்திய பொருளாதாரத்தையே அழித்துவிடும். அரசு கோமா நிலையிலிருந்து விரைவில் வெளிவரவேண்டும்” என எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தான் விடுத்த எச்சரிக்கையை மீண்டும் நினைவு கூர்ந்து இந்த ட்விட்டர் பதிவை ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வார இறுதிநாளில் ஆட்டம்காணும் பங்குச்சந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.