ETV Bharat / bharat

சில மாதங்களில் கரோனாவுக்கான மருந்து...

கரோனா குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இதுவரை 6,000 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. பெருந்தொற்றுக்கான மருந்தை விரைவாக கண்டுபிடிக்க அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த பேரழிவுக்கு முடிவை கொண்டுவந்துவிடலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Corona
Corona
author img

By

Published : May 12, 2020, 8:24 PM IST

Updated : May 12, 2020, 9:15 PM IST

உலக நாடுகள் மீது மனித இனத்திற்கு எதிரான தாக்குதலை வஞ்சகத்துடன் கரோனா வைரஸ் நோய் தொடுத்துவருகிறது. இதுவரை, இந்நோயால் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 88 ஆயிரம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கரோனா மிகப் பெரிய பேரிடரை நிகழ்த்திவருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

இந்தியாவில் மட்டும் 72 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 90 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான மருந்தை எதிர்பார்த்து உலக நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு விதமான வைரஸின் மரபணு உருவாக்கம் குறித்து ஆராய இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கட்டமைப்பு உள்ளது. இருப்பினும், பல்வேறு வைரஸ்களுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக, கரோனா வைரஸ் நோய்க்கு மருந்தை கண்டிபிடிப்பது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த பெருந்தொற்று மாறுதலுக்கு உள்ளாவதால் ஆராய்ச்சியாளர்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. இம்மாதிரியான காரணிகள் விஞ்ஞானிகளின் உறுதித் தன்மையை அதிகரிக்கிறது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி, கரோனாவின் மரபணு உருவாக்கத்தை சீனா வெளியிட்டது. கரோனா குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இதுவரை 6 ஆயிரம் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. பெருந்தொற்றுக்கான மருந்தை விரைவாக கண்டுபிடிக்க அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த பேரழிவுக்கு முடிவை கொண்டுவந்துவிடலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருண்ட உலகத்தில் இந்த நம்பிக்கை கூற்று வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடையும் நோக்கில் புதிய சிகிச்சை முறையை தரமான ஆராய்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர்பெற்ற இஸ்ரேல் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டோர் உடலில் உள்ள வைரஸை விரைவாக அழிப்பதற்கு சரியான மருந்தை கண்டுபிடிப்பதற்கு இது பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அடினோ வைரசுக்கான மருந்தை சிம்பன்சி குரங்கின் உடலில் செலுத்தி புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெற்றி கண்டுள்ளது. கரோனாவுக்கு 30 விதமான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.

எபோலா சிகிச்சைக்கான ரெம்டெசிவிருடன் நான்கு வகை மருந்துகளை கலந்து கொடுக்கப்படுகிறது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மருந்துகளை கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிளேக், தட்டம்மை, சின்னம்மை, போலியோ போன்ற உலகை உலுக்கிய நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பெரிய அளவில் உதவின. அடுத்த சில மாதங்களில் மருந்தை கண்டுபிடிப்பதற்குள் உலகின் 50 முதல் 70 விழுக்காடு மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேசிய, சர்வதேச அளவில் உள்ள புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களுக்கு அதிகமான அளவில் மருந்தை தயார் செய்வது பெரிய சவாலாக இருக்கும். மருந்தை கண்டுபிடித்ததற்குப் பிறகு, அதனை அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க செய்ய உலக நாடுகள் மாற்று கருத்தின்றி ஒன்றிணைய வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைகளே கரோனாவை கட்டுப்படுத்தி வீழ்த்தும்.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

Last Updated : May 12, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.