புதுச்சேரி: நாடு முழுவதும் 116 இடங்களில் இன்று கரோனா நோய் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி போடுவதற்கு தனி இடம், மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு செய்யவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி போட்ட நபர்களை தங்கவைப்பதர்கான தனி அறைகள் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்தந்த மாநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்
அந்த வகையில், புதுச்சேரியில் நான்கு இடங்கள், காரைக்கால் பகுதியில் 4 இடங்கள், ஏனாம் பகுதியில் ஒரு இடம் என அம்மாநிலம் முழுவதும் மொத்தம் ஒன்பது இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை பரிசோதனையை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதேபோல் மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவனிடம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: கோவிட் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!