டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் குஜராத் மாநிலம் தரியாபூர் பகுதியிலுள்ள மசூதியில் தங்கியிருந்துள்ளனர்.
இது அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினருடன் அங்குச் சென்ற காவலர்கள், அவர்களை கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிலருக்கு கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அகமதாபாத் தரியாபூர் பகுதியில் நேற்று மட்டும் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுக்க கரோனா பாதிப்பினால் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.