இந்தியாவில் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துவரும் நிலையில், வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளிம் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்ப்பட்ட 76 வயதான முகமது ஹுசைன் என்பவர் இன்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அவர் தொடர் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்ததால் ஜிம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு மேல் சிகிச்சைக்காக இவர் ஹைதராபாத் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை நிறைவடையும் முன்பே கல்புர்கி மாவட்டத்திற்கு திரும்பி விட்டார். இதையடுத்து அவரது தொண்டையில் இருக்கும் திரவம் பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை அவரது சோதனை அறிக்கை வந்த பிறகே அவர் வைரஸ் தொற்றால் இறந்தாரா அல்லது வயது மூப்பின் காரணமாக இறந்தாரா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க... ஈரான், சீனாவிலிருந்து காஷ்மீர் திரும்பிய 41 இந்தியர்களுக்கும் கொரோனா இல்லை