இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 35 பேர் வைரஸ் பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் மொஹல்லா கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இவரின் கிளினிக்கில் மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை சிகிச்சைக்காக வந்திருந்த அனைவரும் அடுத்து 15 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இவரது கிளினிக் வந்திருந்த பார்வையாளர்கள் யாருக்கேனும் ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளினிக் மூடப்பட்டு, கிளினிக்கை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மொஹல்லா கிளினிக் என்பது டெல்லி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சமூக சுகாதார நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வறியவர்களுக்கு இலவச உணவுப்பொருள்களை வழங்கிய காவல்துறை!