புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "புதுச்சேரி மாநிலத்தில் நான்கு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாகே பிராந்தியத்தில் 77 வயது முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
முத்தியால்பேட்டை மற்றும் அரியாங்குப்பம், திருபுவனை பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் தயவு செய்து வெளியே வரவேண்டாம். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய ஆயிரத்து 523 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) மட்டும் 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: எம்.பி.க்கள் ஊதியத்தை குறைக்க அவசர சட்டம் - திருமாவளவன் எதிர்ப்பு