புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் அங்கு முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும், கரோனா நோயாளிகள் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர், இன்று (ஆகஸ்ட் 25) நண்பகல் மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. கரோனா சிகிச்சை பிரிவில் நோயாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
இதையும் படிங்க: 'இடது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்' - சக மருத்துவர்கள் அதிர்ச்சி