கரோனா தொற்று பரவலால் நாடே முடங்கியுள்ள நிலையில், ஏழைகள் மீதான தாக்கங்களை ஈடுசெய்ய அரசு நிவாரணங்களை அறிவித்துள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுக்க 21 நாள்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலையை எழைகள் சமாளிக்கும் வகையில் ரூ.1.70 கோடி மதிப்பிலான பிரதமர் கரீப் கல்யாண் நிதித் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக அமைப்புச்சாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விதவைகள் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முடுக்கி விடப்பட வேண்டும். ஏனெனில் நிலைமை கட்டுக்குள் வராதப்பட்சத்தில் பூட்டுதல் காலம் நீட்டிக்கப்படலாம். இந்தத் திட்டத்தில் சுணக்கம் இருப்பது அரசாங்கத்தின் பண நெருக்கடியை காட்டுகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. நாட்டில் வணிக தொடர்பு அறுந்துள்ளது. விமானச் சேவை முடங்கி உள்ளது. தினசரி விற்பனையாளர்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசு தொகுப்பு நிதி தெளிவாக இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ. தவணை தொகை மூன்று மாதம் நிறுத்தி வைப்பு நல்ல திட்டம். இது நிதி அல்லது வங்கிக் கணக்கில் செயல்படாத சொத்தாக சேராது.
அதே நேரத்தில் மூன்று மாதம் தள்ளிவைக்கப்படுகிறது. இது வங்கி மற்றும் நிதிசாரா வங்கி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது பூட்டுதல் (21 நாள் முடக்கம்) காரணமாக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க நெருக்கடியைத் தடுக்க போதுமானவை.
எடுத்துக் காட்டாக கடன் சேவை மற்றும் மலிவான கடன் கிடைப்பதிலிருந்து ஏழைகள் தற்காலிகமாக மீட்கப்படுவார்கள். அதேபோல் பலவீனமான நிறுவனங்களின் திவால் தன்மையைத் தவிர்க்க தற்காலிக நாணய ஆதரவு போதுமானதாக இருந்தல் வேண்டும்.
ஏழைகளின் கடன்கள் செலுத்துவதற்கு போதுமான கால அளவு வழங்கப்பட்டது. அதேபோல் அவர்களுக்கு புதிய கடன்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகத் துறைகளைத் தவிர்த்து தற்போதைய நிதி ஆதரவு, மீளுருவாக்கம் மிகவும் வலுவாக இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கவில்லை.
ஆனால் வேகமாக மாறிவரும் சூழ்நிலையின் நிச்சயமற்ற தன்மையை போதுமான அளவு கணிக்க முடியாது. ஆகவே வணிகப் பிரிவுகளுக்கும் அரசாங்கம் இன்னும் சில ஆதரவை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: கடும் நெருக்கடியில் 30 கோடி மாற்றுத்திறனாளிகள்!