புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "நேற்று வரை கரோனா பாதித்த மூவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளரின் மனைவி, மகள் நண்பர் ஆகிய மூவருக்கும் நேற்று (மே 14) பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நமக்கு எச்சரிக்கையை தருகிறது. இனிவரும் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாப்பதன் மூலம் தங்கள் அன்புக்குரிய உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் மக்கள் வீட்டிலேயே இருப்பதை தவிர்த்து உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புதுச்சேரியில் இதுவரை 5 ஆயிரத்து 142 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4,963 பேருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. மற்றவருக்குகளுக்கு சோதனை முடிவு வரவில்லை.
எனவே பொதுமக்கள் மே 17ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டவுடன் அஜாக்கிரதையாக வெளியே சுற்றினால் தொற்று பரவும். எனவே நோய்த்தொற்று சங்கிலியை அறுத்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க... புதுச்சேரியில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!