கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதல் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இதனைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் மக்களிடையே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையம் அருகேயுள்ள சாலையில் கரோனா வைரஸ் குறித்தும், அவற்றால் ஏற்படும் ஆபத்து குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த ஓவியர்கள் இணைந்து சாலைகளில் கரோனா வைரஸின் புகைப்படத்தை 45 அடி நீளத்தில் ஓவியமாக வரைந்தனர்.
பொதுமக்கள் வெளியில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் வரையபட்ட இந்த ஓவியத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கரன், சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு!