ETV Bharat / bharat

சமையல் எண்ணெய் தன்னிறைவுக்கான தேவை: சிறப்புக் கட்டுரை - வணிகச் செய்திகள் பிரேக்கிங்

சமையல் எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளை நம்பியுள்ள இந்தியா உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு பெறவேண்டிய தேவை உருவாகியுள்ளது.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்
author img

By

Published : Jan 22, 2020, 4:45 PM IST

பாமாயில் அத்தியாவசியம்

வெளிநாடுகள் அண்மையில் மேற்கொண்டுள்ள குறைந்தளவிலான நடவடிக்கை இந்திய மக்களின் வாழ்வில் சுமையை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி மலேசியா, இந்தோனேசியா நாடுகள் உயிரி எரிவாயு (Bio Fuel) நுகர்வை 10 விழுக்காடு அதிகரிப்பதாக எடுத்துள்ள முடிவு இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.

கடந்த நான்கு மாதத்தில் ஒரு குவிண்டால் பாமாயில் விதையின் விலை ஐந்தாயிரத்து 445 ரூபாயிலிருந்து ஆறாயிரத்து 914 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை 85 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஏழை, பொதுமக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளாக பாமாயில் திகழ்கிறது.

பாமாயில் போலவே நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் ஏறத் தொடங்கியுள்ளது. எண்ணெய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய உதவித்தொகை ஆகியவற்றை அளிக்க அரசு போதுமான நிதியில்லை என்கிறது.

சமையல் எண்ணெய் இறக்குமதி

75 ஆயிரம் கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் 'கிசான் சம்மான் யோஜனா' என்ற விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு விவசாயி வங்கிக் கணக்கிலும் ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் இந்தத் திட்டத்தின் நிதி 75 ஆயிரம் கோடியிலிருந்து இந்தாண்டு 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அர்ஜென்டினா, இந்தோனேசியா, மலேசியா, ரோமானியா, ரஷியா, உக்ரைன், பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து 100 கோடி டன் அளவிலான சமையல் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சவுதி அரேபியாவிடம் மட்டும் ஒரு மாதத்தில் 11 ஆயிரம் டன் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

மாற்றம்கண்ட உணவுமுறை

கடந்த 30 ஆண்டுகளில் பன்னாட்டு பெருநிறுவனங்கள் சமையல் எண்ணெய் நுகர்வின் அடிப்படைகளை வெகுவாக மாற்றிவருகின்றன. முன்பு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்பாடு சமையலில் வெகுவாக இருந்தது.

அதன்பின்னர், உடல்நலம் குறிப்பாக இருதயக் கோளாறு சிக்கலை காரணம்காட்டி நாட்டு எண்ணெய்கள் பயன்பாடு குறைக்கப்பட்டு, சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயாபீன் எண்ணெய் ஆகியவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்டன.

உதாரணமாக, கடந்த ஓராண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில் 98 விழுக்காடு சூரியகாந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், பாமாயில் ஆகியவைதான்.

பி.டி. காட்டன் நுகர்வு

அதேபோல், பி.டி. காட்டன் விதைகள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்யின் அளவு 12 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. எனவே, நாட்டு எண்ணெய் பயன்பாடு கடந்த காலத்தை ஒப்பிடும்போது வெகுவாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, பி.டி. காட்டன் மூலம் தயாரிக்கப்படும் துணிகள் தரம் குறைந்திருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் பி.டி. காட்டன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

மக்களின் நுகர்வுக்கு தேவையான எண்ணெய் வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், கிடைக்கும் எண்ணெய்யை பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. அதன் காரணமாகவே, நாட்டில் பி.டி. காட்டன் எண்ணெய் நுகர்வு அதிகரித்துவருகிறது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்பாடு குறித்த விழிப்புணர்வின் காரணமாக கடந்த ஓராண்டில் வெளிநாட்டிலிருந்து 27.30 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடலை எண்ணெய்யில் அதிகளவிலான கொழுப்புச்சத்து இருப்பதாகக் கூறி பரப்பப்படும் கருத்தின் காரணமாக, உற்பத்தி செய்யப்படும் கடலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விவசாயிகளை ஊக்குவியுங்கள்

தற்போது வெளிநாடுகளிலிருந்து எண்ணெய் தேவைக்காக 64 விழுக்காடு இறக்குமதி செய்யப்படும் நிலையில் அதை 15 விழுக்காடாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒன்பது வகையான எண்ணெய் விதைகளின் உற்பத்தி வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 52.20 லட்சம் டன்னாக உயர்த்தப்படும்.

இறக்குமதியை 15 விழுக்காடாக குறைப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் இணைந்து அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 2030ஆம் ஆண்டு உலகில் சமையல் எண்ணெய்க்கான தேவை 45 விழுக்காடு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசு - விவசாயிகள் ஒருங்கிணைப்பு

அதேவேளை, இறக்குமதி 1.50 கோடி டன்னிலிருந்து, 2.50 கோடியாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிகரிக்கப்போகும் தேவைக்கேற்ப, அரசு நிலைமையைப் புரிந்துகொண்டு எண்ணெய் விதைகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இந்த முன்னெடுப்புகள் சரியான பாதையில் செல்லாதபட்சத்தில் பொருளாதாரம், உடல்நலம், உணவு ஆகியவற்றில் நாட்டின் தன்னிறைவு என்பது கேள்விக்குறியாகிவிடும். சமையல் எண்ணெய் விவகாரத்தில் அரசு - விவசாயிகளின் ஒருங்கிணைப்பு என்பது காலத்தின் அவசியம்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்!

Intro:Body:

Cooking on the Flame of Foreign Oils

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.