புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் சாலைப் பணி, வாய்க்கால் தூர் வாருதல், கட்டுமானப் பணி உள்ளிட்டவை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் செய்து முடித்த பணிக்கான தொகை சுமார் 100 கோடி ரூபாய், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பணத்தை வழங்கும்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல முறை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதுச்சேரி பில்டர்ஸ் சொசைட்டி டெவலப்மெண்ட் சங்கத் தலைவர் குணசேகரன் தலைமையில், ஒப்பந்தப் பணியாளர்கள், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஒப்பந்ததாரர்களிடம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:கூலித் தொழிலாளி கொலை: முன்விரோதம் காரணமா?