கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் நாட்டில் இதுவரை 33ஆயிரத்து 425 பேர் உயிரிழந்தும், 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சத்தீஸ்கர் மாநிலம் தாம்டரி மாவட்டத்தில் உள்ள வித்தியவாஷினி கோயிலில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் மணி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொடாமல், சென்சார் மூலம் இந்த மணியை அடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் பூசாரி யோகேஷ் சர்மா கூறுகையில், “கரோனா பரவல் காரணமாக இந்த மணி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரவலை தடுக்க முடியும். இந்த மணி அருகில் வந்து பக்தர்கள் கை வைத்தாலோ, கையெடுத்து கும்பிட்டாலோ இந்த மணி அடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூட
ல்