"மதுபானம்" தான் மாநில அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும். ஆனால், நாட்டில் பரவ தொடங்கிய கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு வந்த ஊரடங்கால் பெரும்பான்மையான வணிகங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததோடு மட்டுமின்றி, வரி வசூலிப்பையும் குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதைக் கருத்தில் கொண்டு ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் வருவாய் வசூல் குறைவதை ஈடுகட்டுவதற்காக மதுபானங்களுக்கு கோவிட் பெயரை சொல்லி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மதுபானங்களின் விலை வழக்கத்தை விட அதிகமான விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையேற்றத்தை பொருட்படுத்தாமல் மக்கள் மதுபானங்கள் வாங்குவது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், இந்த ஆய்வானது தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் குடியிருப்பாளர்களான 25 ஆயிரம் நபர்களிடமிருந்து கருத்து பெறப்பட்டுள்ளது. அதில், கரோனாவால் மதுபானங்கள் விலை அதிகரித்தால் மலிவு விலையான லோக்கல் பிராண்டை(Brand) அதிகளவில் வாங்கி வருகிறோம் என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் தங்களது வருமானத்திற்கு ஏற்ற வகையில் மதுபானத்தை வாங்குவதை குறைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அரசு, பீர், ஒயின் போன்ற அனைத்து விதமான மதுபானங்களின் விலையை குறைத்துவிட்டால், மீண்டும் அதிகளவில் மதுபானம் வாங்குவோம் என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்திற்குத் தெலங்கானாவைச் சேர்ந்த 45 விழுக்காடு மக்களும், மேற்கு வங்காளத்தில் 36 விழுக்காடு மக்களும், ராஜஸ்தானில் 67 விழுக்காடு மக்களும் 'ஆம்' என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது பொருளாதார நிலைமைகள், குறிப்பாக ஊதியக் குறைப்புகள், வேலை இழப்புகள் காரணமாக மாநிலங்களில் மதுபான விற்பனை மிகவும் மிதமாக உள்ளது. பல விற்பனையாளர்கள் தங்கள் வழக்கமான வருவாயில் சுமார் 50 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தெலங்கானாவில், கடந்த ஆறு மாதங்களில் மது மீதான வரி சுமார் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி லாக்வுடன் முடிந்த மதுபான கடை திறக்கும்போது விலையில் கூடுதலாக 16 விழுக்காடு வசூலிக்கப்பட்டது.
அதே போல், மேற்கு வங்கத்தில் கடந்தாண்டு மட்டும் மது மீதான வரி பணம் மட்டும் 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.