ஹைதராபாத்: நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், தயாரிப்புகளின் தரம், நேர்மையற்ற வணிக நடைமுறைகள், தவறான விளம்பரங்களை தடுப்பதற்கான அதன் நோக்கங்களை அடைவதில் தோல்வியடைந்துள்ளது.
1986 இயற்றப்பட்ட பழைய சட்டத்திற்கு பதிலாக, புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் நுகர்வோர் தகராறு தீர்க்கும் மன்றங்கள் வெவ்வேறு நிலைகளில் நடைமுறைக்கு வரும் என்றும், கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற பொருள்களை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், 6 மாதங்கள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சட்டத்தின் நோக்கங்களிலிருந்து அடிப்படை யதார்த்தங்கள் வேறுபட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாநில, மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நுகர்வோர் மன்றங்களில் பணிநியமனம் செய்ய உடனடியாக பணிகளை தொடங்குமாறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முந்தைய நுகர்வோர் சட்டத்தின்படி நுகர்வோர் குறைகளை மன்றத்தின் அறிவிப்புக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நடைமுறையில் வழக்குகளைத் தீர்க்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகிறது. மனுதாரர் தனது பொதுநல மனுவில், மாவட்ட, மாநில மன்றங்களில் உள்ள காலியிடங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிட்டார்.
கர்நாடகாவில் நுகர்வோர் வழக்குகள் சர்ச்சைகளைத் தீர்க்க ஏழு ஆண்டுகள் வரை ஆனது. 2020 நவம்பர் வரை தொகுக்கப்பட்ட தகவல்களின்படி, தேசிய நுகர்வோர் மன்றத்தில் மட்டும் 21,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.
காலியாக உள்ள பதவிகளுக்கான பணிநியமனம் நடைபெறாததால், மாநில அளவிலான மன்றங்களில் 1.25 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன, மேலும் அந்த எண்ணிக்கையில் மூன்று மடங்கு வழக்குகள் மாவட்ட மன்றங்களில் நிலுவையில் உள்ளன.
நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நமது அரசாங்கங்கள் எவ்வளவு தீவிரமானவை என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.
தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்பே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் நுகர்வோர் விழிப்புணர்வை பரப்புவதற்காக ஐ.நா. 1985ல் ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நுகர்வோர் உரிமைகளை செயல்படுத்துவதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்குவதில் சட்டம் தோல்வியடைந்தது.
2019ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. எனினும், மன்றங்களில் பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதால் சட்டம் பயனற்றதாக உள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் செய்யப்பட்ட அரசியல் நியமனங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை அறிய நீதிமன்றம் நீதிபதி பசாயத் குழுவையும் நியமித்தது. மன்றங்களில் அரசியல் நியமனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு ஹரியானா போன்ற மாநிலங்களில் மன்றங்களில் குழுவாதம் நிலவுவதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் வசதிகள் இல்லாதது குறித்து கவலை தெரிவித்தது. பல இடங்களில் நுகர்வோர் குறைகளை தொடர்பான கோப்புகள் கரையான்களுக்கான உணவாக மாறி வருகின்றன. நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் என்பது இந்தியாவில் எவ்வளவு மாறுபட்டது என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.
சமீபத்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பணியிடம் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆள்சேர்ப்பு பணியைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான நடைமுறையை அது வகுத்துள்ளது.
தெலங்கானா, ஒடிசா, டெல்லி உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு மாவட்ட நுகர்வோர் மன்றங்களுக்கான நியமனங்களை முடிக்க வேண்டிய அவசியம் குறித்து தாக்கல் அனுப்பியுள்ளன. ஆனால், சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
உலகெங்கிலும், பல நாடுகள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவில், நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகும் நுகர்வோர் மன்றங்களுக்கு நியமனங்கள் நடைபெறவில்லை.
இதையும் படிங்க: அன்னமிடும் கைகளுக்கு அவல விலங்கு