கோவாவின் முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைவைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது. 40 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் 14 உறுப்பினர்களை பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்துவருகிறது.
இருப்பினும், பாஜக 13 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆதரவோடுஆட்சியில் இருந்துவருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ், மனோகர் பாரிக்கருக்கே கோவா பார்வர்டுகட்சியும், எம்.ஜி.பி. கட்சியும் ஆதரவு கொடுத்ததாகவும், இருப்பினும் அவர் மறைந்ததால் பாஜக பெரும்பான்மை இழந்துவிட்டதாக கூறி கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
பாஜகவின் புதிய முதலமைச்சரை தேர்ந்தேடுக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோவா விரைந்துள்ளார். இதற்கிடையே பேசிய கோவா மாநில பாஜக தலைவரும், அம்மாநில துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ, எம்.ஜி.பி. கட்சியின் சுதின் தவாளிகர் முதலமைச்சர பதவியை கேட்பதாகவும், ஆனால் முடிவை நிதின் கட்கரியும், அமித் ஷாவும்தான் எடுப்பார்கள் என கூறியுள்ளார்.