மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து சமூக வலைதளங்கலிலும் காந்தி குறித்த வாசகங்கள் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் போது மறுப்பக்கம் '#Godse Amar Rahe' (நாதுராம் கோட்சே எப்போது எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாதுராம் குறித்த கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பும் செயலில் யார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் அதற்கு யார் பின்புலமாக உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பாஜக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று அவர் கேள்வியெழுப்பினார்.
காந்திக்கு எதிரான கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று கூறிய அவர், இது போன்ற செயல்களை நாம் அனுமதித்தால், அது சமூகத்தில் மற்ற பிரச்னை போல் இதுவும் சாதரணமாகிவிடும். ஆகையால் இதனை விசாரிக்க விசாரணை கமிட்டி அமைத்து காந்திக்கு எதிராகவும் நாதுராம் ஆதரவாகவும் கருத்துகளை பரப்பி வரும் நபர்களின் சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் முக்கிய பிரமுகர் விலகல் - மகாராஷ்டிரா காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம்