ETV Bharat / bharat

மாநில மனித உரிமை ஆணையத்தை நாடிய தெலங்கானா காங்கிரஸ்!

ஹைதராபாத்: தெலங்கானா அரசின் அஜாக்கிரதையால் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மனித உரிமை ஆணையத்தை நாடியுள்ளனர்.

congress-seeks-telangana-shrc-direction-to-state-govt-to-protect-lives

author img

By

Published : Jun 29, 2020, 5:03 PM IST

தெலங்கானாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தெலங்கானாவில் 14 ஆயிரத்து 419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு, 247 பேர் உயிரிழந்தனர். இதனிடையே சில நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், ''தனக்கு ஏற்பட்டு சுவாசப் பிரச்னைக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை வழங்காததால் நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறேன்'' என பேசிய வீடியோ வெளியாகியது.

இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக சிகிச்சை வழங்காமல், மக்களின் உயிரில் அரசு விளையாடி வருகிறது என மாநில அரசை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பொன்னம் பிரபாகர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்காமல் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் நிஜாம்பேட்டா கிராமத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்திலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தெலங்கானா மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் மக்களைக் காப்பாற்ற மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் வழிக்காட்ட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.