புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘காந்தி குடும்பம் நாட்டு மக்களுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளது. சமீபத்தில், ராகுல் காந்தியின் கான்வாய் குஜராத்தில் தாக்கப்பட்டது மூலம், அவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த ஆபத்து வந்தாலும் பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்.
அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு உதவியாக உள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பல கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலைவாய்ப்பே இல்லை. மோடியின் ரிமோட் கண்ட்ரோலாக கிரண் பேடி செயல்படுகிறார். பாஜக அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா அமைச்சரைச் சந்தித்த கபில் தேவ்!