நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில், ஆந்திரா, தெலங்கானா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஒடிசாவில் போட்டியிடும் 56 பேர் பெயர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மேற்கு வங்க மாநிலம் ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுவரை 137 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.