ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பவர் தனியார் அமைப்பைச் சேர்ந்த பெண் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஒரு சர்வதேச தரகரிடம் நாட்டின் ரகசியங்கள் தாங்கிய சந்திப்பை ஒருங்கிணைக்க எப்படி நரேந்திர மோடி ஒத்துக்கொண்டார்” என்றார்
![Congress questions Modi MEPs meet and 'broker' Madi Sharma யார் இந்த தரகர் மடி சர்மா மோடி அரசுக்கு கேள்வி national news in tamil congress latest news modi latest news மோடியுடன் மடி சர்மா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4911688_madisharma.jpg)
மேலும், 'மடி சர்மா' யார் என்று பிரதமர் கூறுவாரா, எந்த அடிப்படையில் அவர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க அரசால் நியமிக்கப்பட்டார் என ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தொடர் வினாக்களை எழுப்பினார்.
பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சில காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்குள் அனுமதிப்பதை எதிர்த்து ட்விட்டரில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.