17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு செயலாளர் பிரணவ் ஜா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் பிரமுகர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருப்பதுதான் அவசியம். தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் மூத்தத் தலைவர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள்.
இன்று ஏழு மணி முதல் பல்வேறு காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் பணியாற்றுவர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை தலைமை அலுவலகம் வருவார்" எனத் தெரிவித்தார்.