புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 27ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் நமச்சிவாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ''தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து இம்மாதம் 27ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம், புதுச்சேரி வியாபாரிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போராட்டங்களை திசை திருப்பவே சிலர் கருத்து கூறுகின்றனர்: திருமாவளவன்