சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து முதல்கட்டமாக இந்தியர்கள் நாடு திரும்பினர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த நிலையில் சீனாவில் இந்திய மாணவர்கள் சிலர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, “சீனாவில் தவிக்கும் இந்திய மாணவர்கள் உடனடியாக தாய்நாடு திரும்ப அனைத்து ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கவேண்டும்” என காங்கிரஸ் உறுப்பினர் கோடிக்குனில் சுரேஷ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதையும் படிங்க : விமானத்தில் வந்த 645 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை