புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேல் தன்னை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவிற்கு பதிலளிக்க சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
”அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து எம்எல்ஏ தனவேலை தகுதி நீக்கம் செய்யக்கோரி கடந்த 30ஆம் தேதி மனு அளித்தனர். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து பதில் அளித்தேன். இந்த மனு மீதான நடவடிக்கை எடுக்க 7 வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளேன்.
என்னை நீக்கும் அதிகாரம் என்னுடைய தொகுதி மக்களுக்கே உண்டு. அவர்கள் என்னுடைய நன்னடத்தையை கொண்டு தேர்தல் முடிவுகளில் தீர்மானிப்பார்கள்.
நான் யாருடைய தூண்டுதலின் பேரிலும் ஆளுநரிடம் புகாரளிக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிடம் பலமுறை புகார் கடிதம் கொடுத்தும் என்னுடைய கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை. அதுமட்டுமின்றி தலைமையில் இருந்தும் என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை” என்றார்.
மேலும் படிக்க: சட்டப்பேரவைக் கூட்டத்தில் செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ!