குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார். பிரணாப்பின் இறப்புக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், "கடந்த சில நாள்களாகவே, பிரணாப்பின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும் அவரின் இறப்புச் செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் மத்திய அரசின் செயல்பாடுகளிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். அறிவாற்றல், அனுபவம், ஆலோசனை என பல விவகாரங்களில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை இல்லாமல் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
பிரணாப் வகித்த அனைத்து பதவிகளிலும் அவர் தனித்துவமான பங்கை ஆற்றினார். கட்சி கடந்து அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்ற பிரணாப், நாட்டுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். அவரின் 50 ஆண்டுகால வாழ்க்கையில் நாட்டின் வரலாறு பிரதிபலிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரணாப் என்ற பீனிக்ஸ் பறவை