ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் - ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்

டெல்லி: வெளிமாநில தொழிலாளர்களின் சிறப்பு ரயில் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Jun 4, 2020, 5:55 PM IST

கரோனா வைரஸ் நோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, அடிப்படை வசதிகளின்றி வெளிமாநில தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களை சொந்த மாநிலத்துக்கு இட்டுச் செல்லும் வகையில், ரயில்வே துறை ஷ்ராமிக் சிறப்பு ரயிலை இயக்கியது. ஆனால், ரயிலில் பயணம் செய்த தொழிலாளர்கள் உணவின்றி தவித்துள்ளனர். இதனால், பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் சிறப்பு ரயில் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயிலில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொது மக்களிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை மத்திய அரசு கூறியுள்ளது தெரியவருகிறது.

சிறப்பு ரயிலை இயக்கியதன் மூலம் பெறப்படும் 85 விழுக்காடு மானியம் மாநில அரசுக்கு கொடுக்கப்படும் ரயில்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அதிகாரப்பூர்வ உத்தரவை ஆதாரமாக கொடுக்க வேண்டும். ரயில் இயக்கியதன் மூலம் வரும் செலவை, ரயில் எங்கிருந்து கிளம்பியதோ அந்த மாநில அரசு ஏற்கபோகிறதா அல்லது ரயில் சென்றடைந்த மாநிலம் ஏற்கபோகிறதா?

இது முக்கியமான விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தியாக வேண்டும். இம்மாதிரியான முரண்பாட்டில், ரயில்வேதுறை அமைச்சரை ஏன் நீக்க கூடாது? அவர் ஏன் பதவி விலகக் கூடாது? இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில், போதுமான வசதிகளை மத்திய செய்து தந்தபோதிலும் பொறுமையை இழந்த வெளிமாநில தொழிளாலர்கள் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே சென்றனர்" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவிற்குள் நுழைய ஆயிரம் வெளிநாட்டவருக்கு தடை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.