காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "11.7 விழுக்காடாக இருந்த வாராக்கடன் 9.2 விழுக்காடாக குறைந்ததன் மூலம் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்ததாக அரசு தெரிவிக்கிறது.
பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோதிலும், அது குறித்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை.
வங்கிகள் கடன்கள் வழங்குவதே பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு எடுத்துக்காட்டு. ஆனால், தேவைகள் குறைந்தால் அந்தப் பொருளாதார மந்தநிலையாக மாறும். தனியார் வங்கிகளில் இன்றைய தேவை 12 விழுக்காடாக குறைந்துள்ளது.
அரசு வங்கிகளில் நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது. பொருளாதாரம் சந்தித்துவரும் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்த உண்மை உணர்த்தப்படுவதன் மூலம் அரசு ஒரு நாள் ஆட்டம் காணும்.
வங்கிகள் சந்தித்துவரும் பிரச்னைகள் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் 16 விழுக்காடு அதாவது 16.88 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக மாறவுள்ளது.
2019ஆம் ஆண்டுவரை இது 12 விழுக்காடாக இருந்தது. விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் பயன்பெறுவோரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் மதிப்பு உயர்ந்தால் காங்கிரசுக்கு அது பிடிப்பதில்லை - பாஜக