தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியானது. அதில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் விடுபட்டுப்போனதாக பிரச்னை எழுந்தது.
இந்நிலையில் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை மசோதாவால் வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு அங்கு செல்கிறது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ஜிதேந்திர சிங், மாணிக் தாகூர், முகமது அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் பேசுகையில், "இந்த மசோதாவால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் சில மாற்றுக் கருத்துகள் உள்ளன. எனவே பொதுமக்களின் நிலையைப் பற்றி முழுமையாக அறிவதற்காக காங்கிரஸ் குழு பயணப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 19 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை; இந்திய அரசின் அறிவிப்பால் அஸ்ஸாமில் பதற்றம்!