புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே சாமிப்பிள்ளை தோட்டம், லெனின் நகர், கருவடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆதரவாளர்கள் அப்பகுதி வாக்களர்களுக்கு கூப்பன் ஒன்று வழங்கியுள்ளனர்.
அது ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை இலவசமாக பெறுவதற்கு வழங்கப்படடதாகக் கூறி அதிமுக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர் லெனின் துரை, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளின் தொண்டர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியரிடம், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகாரளித்தனர்.
இதையும் படிங்க: வன்னியர்கள் வாக்கு யாருக்கு? அதிமுகவின் தோல்வி- பா.ம.க.வின் வீழ்ச்சி!