புவனேஸ்வர்: வருகிற 15ஆம் தேதி ஏழு மணி நேர கடை அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு எதிராக மத்திய மற்றும் மாநில (ஒடிசா அரசு) அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையடைப்பு பிப்ரவரி 15ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி, மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிப்ரவரி 15ஆம் தேதி, வாகனங்கள் ஓடாது. கடைகள் பிற வணிக நிறுவனங்களும் மூடப்படும். கோவிட் பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய-மாநில அரசுகள் எரிபொருள் விலையை அதிகரித்துவருகின்றன. இது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மத்திய- மாநில அரசுகள் எரிபொருள் விலையை குறைக்க முன்வரவேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாசிய பொருள்களின் விலை அதிகரித்துவருகின்றன. இதில் அரசாங்கம் கவனம் செலுத்தி எரிபொருள் விலையை குறைக்க முன்வர வேண்டும்” என்றார். மேலும், “ஒடிசாவில் கொலை, கொள்ளை அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை- கே.எஸ்.அழகிரி